காந்தி படம் பொறித்த நாணயத்தை வெளியிடும் இங்கிலாந்து! – இந்தியா மகிழ்ச்சி!
இந்தியாவில் தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் காந்தியின் உருவப்படம் பொறித்த நாணயத்தை வெளியிடுவதாக இங்கிலாந்து அறிவித்துள்ளது.
ஆண்டுதோறும் உலக அளவில் சிறந்து விளங்கிய தலைவர்களின் படங்களை இங்கிலாந்து அரசு நாணயமாக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தீபாவளி அன்று அறிவிப்பு வெளியிட்ட இங்கிலாந்து இந்த ஆண்டு மகாத்மா காந்தியின் படத்தை நாணயத்தில் வெளியிடுவதாக அறிவித்துள்ளது.
நாணயத்தின் பின் பகுதியில் இந்தியாவின் தேசிய மலரான தாமரை இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது. இந்த நாணயம் பொது புழக்க நாணயமாக இல்லாமல் தங்கம் மற்றும் வெள்ளி நாணயமாக வெளியிடப்படும் என இங்கிலாந்து தெரிவித்துள்ளது.