வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 16 ஜூலை 2023 (08:57 IST)

கடும் உணவுப்பஞ்சம்.. விவசாயிகள் கடத்தல்.. அவசரநிலை பிரகடனம் செய்த அரசு..!

நைஜீரியா நாட்டில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டதை அடுத்து விவசாயிகள் கடத்தப்படுவதாகவும் இதனை அடுத்து அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியா நாட்டில் சற்றுமுன் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கொள்ளையர்களால் கடத்தப்படுவதாகவும் அவர்களது விளை பொருள்கள் திருட்டு போவதாகவும் எனவே விவசாயிகளுக்கான பாதுகாப்பை அதிகரிக்க நைஜீரிய அரசு அவசரநிலை பிரகடனம் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
மேலும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதை அடுத்து மக்களை பாதுகாக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என நைஜீரியா அதிபர் போலா டின்பு என்பவர் தெரிவித்துள்ளார். நைஜீரியாவில் விலைவாசி உயர்வு காரணமாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும்.
 
Edited by Siva