ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (08:48 IST)

இனி செல்போனே தேவைப்படாது.. 2வது நபருக்கு மூளையில் சிப் பொருத்திய எலான் மஸ்க்..

HUMAN MIND CHIP
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ஏற்கனவே மூளையில் சிப் பொருத்தி சோதனை செய்த நிலையில் தற்போது இன்னொரு நபருக்கு மூலையில் சிப் பொருத்தி உள்ளதாகவும் இந்த சோதனை மட்டும் வெற்றி பெற்று விட்டால் எதிர்காலத்தில் செல்போன் தேவைப்படாது என்றும் நாம் மனதில் நினைக்கும் எண்ணங்களை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் இன்னொருவருக்கு பகிர்ந்து கொள்ளலாம் என்றும் நியூராலிங்க் மூலம் இந்த தொழில்நுட்பம் நடைபெறும் என்றும் எலான் மஸ்க் தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மனித மூளைக்கும் கம்ப்யூட்டருக்கும் உள்ள தொடர்பை உருவாக்க மின்னணு சாதனமான சிப் ஒன்றை பொருத்தும் சோதனையில் எலான் மஸ்க் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குரங்குகளின் மூளையில் சிப் பொருத்தப்பட்டு சோதனை செய்யப்பட்ட நிலையில் தற்போது மனித மூளையிலும் சிப் பொருத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தோள்பட்டை செயலிழந்த ஒருவருக்கு சிப் பொருத்தப்பட்டது என்பதும் இதனை அடுத்து தற்போது இரண்டாவது ஆக ஒரு நபருக்கு நியூராலிங்க் சிப் பொருத்தப்பட்டுள்ளதாகவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த நபர் முதுகு வண்டு தடத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூராலிங்க் சிப் மூலம் மாற்றுத் திறனாளிகள் குணமடைந்து விடுவார்கள் என்றும் இந்த சிப் காரணமாக மனிதர்களின் திறன் மேம்படும் என்றும் சூப்பர் மேன் போல் அசாத்திய சக்தி கொண்டவர்களாக இருப்பார்கள் என்றும் பலர் தங்களது எண்ண ஓட்டங்கள் மூலம் செய்திகளை பகிர்ந்து கொள்ள முடியும் என்பதால் எதிர்காலத்தில் செல்போனை தேவைப்படாது என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த நவீன தொழில்நுட்பம் எதிர்காலத்தில் எந்த வகையான பலனை தரும்? சிக்கலை தரும்? என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Siva