1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 2 ஜூன் 2022 (10:37 IST)

டெஸ்லா பணியாளர்களுக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை

elan musk
டெஸ்லா கார் தொழிற்சாலையின் உரிமையாளர் எலான் மஸ்க் தனது ஊழியர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
வீடுகளில் இருந்தபடியே பணியாற்றும் பணியாளர்கள் அலுவலகம் வந்து வேலை செய்ய வேண்டுமென்றும் அப்படி வராவிட்டால் அவர்கள் நிறுவனத்தை விட்டு சென்று விடலாம் என்றும் டெஸ்லா நிறுவனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வீடுகளில் இருந்து வேலை செய்யும் நடைமுறை அமலுக்கு வந்தது என்றும் தற்போது பெரும்பாலான நிறுவனங்கள் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்யும் முறையை ஆரம்பித்துவிட்ட நிலையில் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது