திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 21 ஜனவரி 2022 (20:05 IST)

சுனாமியால் பாதிக்கப்பட்ட தீவுகளுக்கு இணையதள சேவை: எலான் மாஸ்க் அறிவிப்பு!

சுனாமியால் பாதிக்கப்பட்ட தீவுகளுக்கு இணையதள சேவை: எலான் மாஸ்க் அறிவிப்பு!
சமீபத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட தீவுகளுக்கு தனது சொந்த செலவில் இணையதள சேவை தர இருப்பதாக பிரபல தொழிலதிபர் எலான் மாஸ்க் என்று தெரிவித்துள்ளார் 
 
சமீபத்தில் கடலுக்குள் ஏற்பட்ட பெரும் எரிமலை வெடிப்பு காரணமாக டோங்கோ என்ற தீவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு இணையதள சேவையை முழுவதும் துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது
 
இந்த நிலையில் டோங்கோ நாட்டில் இணையதள சேவை தர முன் வந்துள்ளார் எலான்மாஸ்க். தனக்கு சொந்தமான செயற்கைக்கோள் பயன்படுத்தி இணையதள சேவையை துவங்க தீவுகளுக்கு ஸ்டார்லிங் மூலம் வழங்க முன்வந்துள்ளார்
 
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதை அடுத்து அந்த தீவு மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது