1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 28 டிசம்பர் 2023 (07:30 IST)

திடீரென மூடப்பட்டது பாரிஸ் ஈபிள் டவர்.. என்ன காரணம்?

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஈபிள் டவர் 365 நாட்களும் சுற்றுலா பயணிகளுக்காக திறந்து இருக்கும் நிலையில் திடீரென நேற்று மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஈபிள் டவரில் வேலை செய்யும் ஊழியர்கள் தங்களது நிர்வாகத்தை எதிர்த்து திடீரென வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் இதனால் ஈபிள் டவர் மூடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.  

எதற்காக வேலை நிறுத்தம் செய்கிறோம் என்பது குறித்து தொழிற்சங்க பிரதிநிதிகள் எந்த கேள்விக்கும் ஊடகத்திற்கு பதில் அளிக்கவில்லை என்றும் வேலை நிறுத்தம் எத்தனை நாள் நீடிக்கும் என்பது தெளிவாக தெரியவில்லை என்பதால் சுற்றுலா பயணிகள் அதிருப்தியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே அதிகமாக பார்வையிடப்படும் சுற்றுலா தலங்களில் ஒன்றான ஈபிள் டவர்  ஆண்டு முழுவதும் திறந்திருக்கும் நிலையில் திடீரென மூடப்பட்டதால் வருத்தம் அளிப்பதாக அங்கு வந்த சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர்

ஏற்கனவே ஈபிள் டவரை பார்க்க டிக்கெட் எடுத்தவர்களுக்கு வேலை நிறுத்தம் முடிந்த பிறகு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்படும் என்றும் அதன் பிறகு ஈபிள் டவரை காண வரும்படி ஈபிள் டவர் நிர்வாகம் சுற்றுலா பயணிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

Edited by Siva