வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Geetha Priya
Last Updated : வியாழன், 28 ஆகஸ்ட் 2014 (19:22 IST)

எபோலா நோய் தாக்கி பலியாவோர் எண்ணிக்கை 20,000 ஆக அதிகரிக்கும் - உலக சுகாதார மையம்

உலகை அச்சுறுத்திவரும் எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டு பலியாவோர்களின் எண்ணிக்கை 20,000 பேரை எட்டும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. 
உலக நாடுகளை அச்சுறுத்திவரும் எபோலா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட மருந்து கண்டறியப்படவில்லை. இந்நிலையில், இந்த உயிர்கொல்லி நோய் தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை  1,552 ஆக அதிகரித்துள்ளது.
 
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவிவரும் இந்த எபோலா வைரஸ் தாக்குதலால் பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் பாதிப்படைந்துள்ள நிலையில் இரு அமெரிக்கர்களையும் இந்த நோய் தாக்கியுள்ளது.
 
ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இந்தியா திரும்பும் மக்களுக்கு விமான நிலையங்களில் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
 
இந்நிலையில், இந்த நோய் தாக்குதல் ஏற்பட்டு பலியாவோர்களின் எண்ணிக்கை குறித்து உலக சுகாதார மையம் தெரிவிக்கையில்,  எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டு பலியாவோர்களின் எண்ணிக்கை 20,000 பேரை எட்டும் எனவும் மேலும் இந்த நோயை தடுக்க அடுத்த ஆறு மாதங்களில் 490 மில்லியன் டாலர் பணம் தேவைப்படும் எனவும் தெரிவித்துள்ளது.