1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : சனி, 13 பிப்ரவரி 2016 (14:45 IST)

இந்தோனேஷியாவில் 6.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் நிலநடுக்கம் 6.5 ஆக பதிவானது.


 

 
இந்தோனேஷியாவின் சும்பா மாகானத்தில் கிழக்கு நுசா தெங்கரா பகுதியில் பூமிக்கடியில் 30 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
 
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் பீதியடைந்தனர். நிலநடுக்கத்தால், ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக எந்த தகவலும் இல்லை.
 
இந்தோனேஷியாவில் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் போன்ற இயக்கை பேரிடர் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.
 
இந்த நிலநடுக்கம் காரணமாக அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.