1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 30 டிசம்பர் 2023 (13:16 IST)

இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் பரபரப்பு..!

earthquake
சற்று முன் இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இந்தோனேசியாவின் வடக்கு சுமித்ரா தீவுகளில் சற்று முன்னர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் ரிக்டர் அளவில் 5.9 என பதிவாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
இதனை அடுத்து இந்தோனேசியா மற்றும் கடற்கரை ஒட்டிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை 10:49 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
 
இந்தோனேஷியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் இந்தியா இலங்கை போன்ற நாடுகளுக்கு எந்தவித எச்சரிக்கையும் இதுவரை விடுக்கப்படவில்லை என்றும் தெரிகிறது. 
 
ஏற்கனவே நேற்று இரவு மியான்னரில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இந்தியாவில் உள்ள மணிப்பூர் உள்பட ஒரு சில பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக செய்திகள் வெளியானது.
 
Edited by Mahendran