வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 18 பிப்ரவரி 2015 (17:23 IST)

அட.. சூரியன்தான் பூமியை சுற்றுகிறதாம்; அரேபியா மதகுரு புது விளக்கம்

பூமி சூரியனை சுற்ற வில்லை; சூரியன்தான் பூமியை சுற்றுகிறது என்ற புது விளக்கத்தை அரேபிய மதகுரு அளித்துள்ளார்.
 
அரேபியாவைச் சேர்ந்த ஷேக் பந்தர் அல் - ஹைபாரி என்ற மதகுரு ஒருவரிடம், பூமி பற்றிய சந்தேகங்களை மாணவர்கள் கேட்டுள்ளனர். அதற்கு பதில் அளித்த ஷேக் பந்தர் அறிவியலுக்கு முரணான பதிலை கூறியுள்ளார்.

 
இது குறித்து விளக்கம் அளித்த ஷேக் பந்தர் அல்-ஹைபாரி, ”பூமி சுற்றவில்லை. ஆடாமல் அசையாமல் ஓரிடத்தில் அப்படியேதான் நின்று கொண்டிருக்கிறது ஆனால் பூமியை சூரியந்தான் சுற்றி வருகிறது” என்று கூறியுள்ளார்.
 
அதற்கு ஒரு செய்முறை விளக்கத்தையும் அளித்துள்ளார். அவர் கூறும்போது, ”நாம் இஸ்லாமிய புத்தி உடையவர்கள். முதலில் நாம் எங்கு இருக்கிறோம். நாம் சார்ஜாவில் இருந்து விமான நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து சீனா விமான நிலையம் செல்வதாக வைத்து கொள்வோம். இதை பூமியாக வைத்துக் கொள்வோம் [தண்ணீர் நிரப்பப்பட்டு மூடப்பட்ட கப் ஒன்றை கையில் அவர் பிடித்துக் கொண்டார்].
 
அப்போது நடுவானில் விமானம் நிறுத்தப்பட்டால் சீனா தானாகவே நம்மை நோக்கி வர வேண்டும். நீங்கள் பூமி சுழல்வதாக கூறுகிறீர்கள் என்றால், விமானம் சீனாவை சென்றடைய முடியாது. ஏனென்றால் பூமியும் சுழல்கிறது, சீனாவும் சுழல்கிறது. பிறகு நீங்கள் எப்படி சீனா சென்றடைய முடியும்?” என்றார்.