ஏரோபிளேனை கயிறு கட்டி இழுத்த துபாய் போலீஸ்: வைரல் வீடியோ!!


Sugapriya Prakash| Last Updated: வெள்ளி, 10 நவம்பர் 2017 (20:39 IST)
துபாய் போலீஸார் வித்தியாசமான சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளனர். இந்த சாதனை கின்னஸ் வரை சென்றுள்ளது. 

 
 
உலகிலேயே மிக பெரிய பொதுச்சேவை விமானமான ஏர்பஸ் ஏ380 (Airbus A380) துபாயில் உள்ளது. இந்த ஏர்பஸ் விமானத்தை கயிறு கட்டி இழுத்து துபாய் போலீஸ் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
 
சுமார் 3.02 லட்சம் எடை உடைய இந்த விமானத்தை 56 துபாய் விமான நிலைய போலீஸார் கயிறு கட்டி இழுத்துள்ளனர். 
 
இதற்கு முன்னர் 2011 ஆம் ஆண்டு ஹாங்காங்கில் 2.18 லட்சம் கிலோ எடை உடைய விமானத்தை 100 பேர் இழுத்தது சாதனையாக கருதப்பட்டது.
 
தற்போது இந்த சாதனையை துபாய் போலீஸார் முறியடித்துள்ளனர். இந்த சாதனை வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. 
 
இதோ அந்த வீடியோ உங்களுக்காக....
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :