1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 8 நவம்பர் 2022 (20:43 IST)

ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடவுள்ள டொனால்ட் டிரம்ப் ! அமெரிக்காவில் பரபரப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவது பற்றி டிரம்ப் விரைவில் தகவல் வெளியிடுவார் என தகவல் வெளியாகிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப் தோல்வியடைந்தார். அந்த தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார்

இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருப்பதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று அமெரிக்காவில் ஓகியோ மாகாணத்தில் தன் கட்சியினர் மத்தியில் டிரம்ப் பேசினார். அதில், வரும் நவம்பர் 15 ஆம் தேதி, புளோரிடா – மார் ஏ லகோ என்ற பண்ணை வீட்டில் ஒரு புதிய அறிவிப்பு வெளியிடுவேன் என்று கூறியுள்ளார்.

எனவே, 2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்த அறிவிப்பை அவர் வெளியிடுவார் எனத் தெரிகிறது.

இது அமெரிக்க அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

 
Edited by Sinoj