திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 16 அக்டோபர் 2020 (08:05 IST)

அவருடன் பேச விருப்பமில்லை: ட்ரம்ப் சொல்லும் அந்த ’அவர்’ யார்?

சமீபமாக சீன அதிபர் ஸீ ஜின்பிங்குடன் நான் பேசவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேச்சு. 
 
அமெரிக்கா – சீனா இடையே கொரோனாவிற்கு முன்பிருந்தே வர்த்தக ரீதியான மோதல் இருந்து வந்த நிலையில் , சீனாவால்தான் உலகம் முழுவதும் கொரோனா பரவியது என அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. மேலும் இந்தியா உள்ளிட்ட எல்லை நாடுகள் மீது சீனா அத்துமீறுவதை கண்டித்து வரும் அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை சீன பசிபிக் சர்வதேச கடல் எல்லையில் நிறுத்தியுள்ளது அச்சுறுத்தலாக சீனாவால் பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில், கொரோனா வைரஸ் பெருந்தொற்றை சீனா கையாண்ட விதத்தைக் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், சமீபமாக சீன அதிபர் ஸீ ஜின்பிங்குடன் நான் பேசவில்லை. எனக்கு பேசுவதற்கு விருப்பமும் இல்லை. நான் சீன வைரஸை, முறியடித்துவிட்டேன். எனக்கு நோய் எதிர்ப்பு சக்தி வந்திருப்பதால் நலமுடன் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.