1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 14 ஜூலை 2020 (09:54 IST)

கொரோனா மருந்து: ரஷ்யாவின் வெற்றி வெற்றிதானா... WHO சொல்வது என்ன??

ரஷ்யா கொரோனவுக்கு மருந்து கண்டுபிடித்து அதனை வெற்றிகரமாக சோதித்துள்ளது. இது குறித்து WHO தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளது. 

 
உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி மனித இனத்தையே அழித்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த தடுப்பு ஊசி மற்றும் மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் பல  ஈடுப்பட்டுள்ளன. 
 
குறிப்பாக இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் கொரனோ தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடித்து அதனை மனிதர்கள் மீது செலுத்தி வெற்றியும் கண்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. 
 
மேலும், மனிதர்களிடம் செலுத்தி ஆராயப்பட்ட தடுப்பூசி பாதுகாப்பானது என்று உறுதிசெய்யப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளது ரஷ்யா. இதனிடையே உலக சுகாகார நிறுவனம் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளது. 
 
அதாவது, மிக அதிகளவு நபர்களிடம் சோதிக்கப்படும் Phase 3 ட்ரையலுக்கு பிறகே, தடுப்பூசியின் திறன் குறித்து தெளிவான முடிவு கிடைக்கும் என்று உலக சுகாகார நிறுவனம் தெரிவித்துள்ளது.