செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 31 டிசம்பர் 2020 (09:17 IST)

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக எம்.பிக்கு கொரோனா! – சேலத்தில் பரபரப்பு!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சார பணிகள் தொடங்கியுள்ள நிலையில் பிரச்சாரத்தில் இருந்த திமுக எம்.பி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சட்டமன்ற தேர்தலும் நெருங்கி வருவதால் தேர்தல் பிரச்சார பணிகள் வேகமெடுத்துள்ளன. தமிழகத்தில் முழுமையாக கொரோனா பாதிப்புகள் குறையாத நிலையில் அரசியல் கூட்டங்கள், பொது நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எனினும் சமூக இடைவெளியை பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல் போன்ற கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த திமுக எம்.பி பார்த்திபனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.