வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: திங்கள், 22 டிசம்பர் 2014 (20:23 IST)

ரஷ்யாவில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வைரங்கள் இருந்த பாறை கண்டுபிடிப்பு

ரஷ்யாவில் உதாசபையா என்ற இடத்தில் மிகப்பெரிய வைரச்சுரங்கம் உள்ளது. சமீபத்தில் இங்கு பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. அதில் ஒரு பாறை சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில் இருந்தது. அந்த பாறை முழுவதும் வைரக்கற்களால் ஜொலித்தது. அந்த பாறைக்குள் மொத்தம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வைரங்கள் இருந்தன.
 
இந்த வைரங்கள் 1 முதல் 6 காரட் எடை கொண்டவை. இவை அனைத்தும் ஒன்றாக திரண்டு கட்டியாக உள்ளன. அவை ஒவ்வொன்றும் தலா 0.04 இஞ்ச் உயரம் கொண்டவை. 2 பிரமிடுகள் இணைந்துள்ளது போன்ற வடிவில் உள்ளன.
 
இந்த தகவலை டென்னிசே பல்கலைக்கழக மண்ணியல் நிபுணர் போராசிரியர் லர்ரி டெய்லர் தெரிவித்துள்ளார்.