வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 29 ஜனவரி 2023 (12:55 IST)

இளவரசி டயானா அணிந்த கவுன் இத்தனை கோடிக்கு ஏலமா? ஆச்சரிய தகவல்

diana gown
இளவரசி டயானா அணிந்த கவுன் இத்தனை கோடிக்கு ஏலமா? ஆச்சரிய தகவல்
மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானா அணிந்த கவுன் பல கோடிக்கு ஏலம் போய் உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானா அணிந்த ஒரு கவுன் ரூ.4.9 கோடி ரூபாய்க்கு ஏலம் போய் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள புகழ் பெற்ற ஏல நிறுவனம் ஒன்றில் சமீபத்தில் இங்கிலாந்து இளவரசி டயானா அணிந்த உடைகள் ஏலம் விடப்பட்டது. 
 
இந்த நிலையில் அவர் அணிந்த ஒரு கவுன் 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் டாலர் வரை விற்பனை ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதைவிட ஐந்து மடங்கு விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் இந்த கவுன் ரூ.4.9 கோடிக்கு ஏலம் போனதாக கூறப்படுகிறது. அவர் தனது வாழ்க்கையில் இரண்டு முறை மட்டுமே இந்த கவுனை அணிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva