1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Dinesh
Last Updated : திங்கள், 26 செப்டம்பர் 2016 (18:49 IST)

இந்திய அரசியலில் இல்லை! ஆனால் அமெரிக்க அரசியலில் இருக்கிறது! அது என்ன?

அமெரிக்க அதிபர் பாராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் நிறைவடைவதால், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி நடைபெற இருக்கிறது. 


 
 
இந்த தேர்தலில், குடியரசுக் கட்சி, டொனால்டு டிரம்பையும், ஜனநாயக கட்சி, ஹிலாரி கிளிண்டனையும் வேட்பாளராக அறிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பு இருகட்சிகளின் வேட்பாளர்களுக்கிடையே நேரடி விவாதம் நடைபெறுவது வழக்கம். இதில் அமெரிக்காவை வழிநடத்துவதற்கான திட்டங்கள் குறித்து விவகாதங்கள் நடைப்பெறும். 
 
நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி, பொருளாதாரம் ஆகிய தலைப்புகளில் நடைபெற உள்ள இந்த விவாதம் இந்திய நேரப்படி நாளை காலை 6.30 மணிக்கு துவங்க இருக்கிறது. 2-வது விவாதம் அக்டோபர் 9-ம் தேதியும், இறுதி விவாதம் அக்டோபர் 19-ம் தேதியும் நடைபெற உள்ளது. இந்த விவாத கலாச்சாரம் இந்திய அரசியலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.