பிரபல நடிகர் காணாமல் போன இடத்தில் இறந்த உடல் கண்டுபிடிப்பு
நடிகர் ஜூலியன் சாண்ட்ஸ் காணாமல் போன இடத்தில் இறந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அது ஜூலியன் சாண்ட்ஸாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகர் ஜூலியன் சாண்ட்ஸ்(65 ). இவர் கில்லிங் ஃபீல்ட்ஸ், எ ரூம் வித் எ வியூ, வார்லா,, லீவிங் லாஸ் வேகாச் உட்பட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் கடந்த ஜனவரி 13 ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து 80 கிமீ தூரத்திலுள்ள சான் கேப்ரியல் மலைத்தொடரில் மலையேற சென்றிருந்தார்.
அதன்பின்னர் அவரை காணவில்லை,அப்பகுதியில் உள்ள மவுண்ட் பால்ட் பகுதியில் அவர் கடைசியாக காணப்பட்டதாகவும் அதன்பின்னர் அவர் எங்கு சென்றாரென தெரியவில்லை எனக் கூறப்படுகிறது.
எனவே அவரைத் தேடும் பணியில் 80க்கும் மேற்பட்ட மீட்புக் குழுவினனர் ஈடுபட்டனர். இவர்களுடன் இணைந்து தன்னார்வலர்கள், ஹெலிகாப்டர் மறும் டிரோன் ஆகியவை பயன்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், அங்கு மலையேற சென்ற சிலர் ஒரு உடல் கிடப்பதை கண்டனர். இதுபற்றி போலீஸுக்கு தகவல் அளித்தனர். அதனால், இது ஜூலியன் சாண்ட்ஸ் உடலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.