1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 11 ஏப்ரல் 2014 (17:06 IST)

ஈராக்கில் பல்வேறு கார்குண்டு தாக்குதல்களில் 34 பேர் பலி

ஈராக்கில் ‘ஷியா' பிரிவினர் வாழும் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட கார்குண்டு தாக்குதல்களில் 34  பேர் உயிரிழந்தனர், 90 க்கும் மேற்பப்டோர் காயம் அடைந்துள்ளனர்.
தலைநகர் பாக்தாத்திலிருந்து 80 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நுமானியா நகரின் வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த பகுதியில், கார் குண்டு வெடித்தில் 5 பேர் பலியாகினர், 17 பேர் காயம் அடைந்தனர். பாக்தாத் நகரிலும், அதன் அருகேயுள்ள காமியா பகுதியிலும் வெடித்த கார்குண்டுக்கு 9 பேர் உயிரிழந்தனர், 11 பேர் காயம் அடைந்துள்ளனர்
 
சாப், கர்ரடா, மாமில், சம்மையா, சதார்நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் கார்குண்டுகள் வெடித்தன. அவற்றில் 13 பேர் இறந்ததாகவும் 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
 
பாக்தாத்தின் ஜதிரியாவில் வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த பகுதியிலும் மற்றொரு கார் குண்டு வெடித்தது. அதில் 3 பேர் கொல்லப்பட்டனர். 8 பேர் காயமடைந்துள்னர். மேலும், ஷபா அல்போர் என்ற இடத்தில் நடந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்ததாகவும் 13 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஒருநாள் தாக்குதல்களில் மட்டும் 34 பேர் பலியாகி உள்ளனர். 90 க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர்.
 
இத்தாக்குதல்கள் மூலம் தீவிரவாதிகள் போர்அறிவிப்பை பகிரங்கமாக வெளியிட்டுள்ளனர் என்றும் நாட்டின் மத்திய கிழக்கு பகுதியில் குழப்பம் விளைவிக்க முயற்சிக்கின்றனர் என்றும்  ஈராக் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்
 
ஏப்ரல் மாத இறுதியில் ஈராக்கில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் ஈராக்கில் தீவிரவாத தாக்குதல்களுக்கு 2800 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.