வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : சனி, 9 மே 2015 (12:50 IST)

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்: மீண்டும் பிரதமராகிறார் டேவிட் கேமரூன்

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் டேவிட் கேமரூன் தலைமையிலான, கன்சர்வேடிவ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. இதனால், மீண்டும் டேவிட் கேமரூன் பிரிட்டனின் பிரதமராக பதவியேற்க உள்ளார்.


 

 
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இங்கிலாந்திற்கு 533 இடங்கள், ஸ்காட்லாந்திற்கு 59 இடங்கள் , வேல்ஸ்க்கு 40 இடங்கள் மற்றும் வடக்கு அயர்லாந்தில் 18 இடங்கள் என்பது உள்ளிட்ட மொத்தம் 650 இடங்கள் உள்ளன.
 
இந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரிட்டனில் உள்ள 5 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுள்ளனர். இவர்களுக்காக நாடு முழுவதும் 50 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 
 
இந்நிலையில், பலத்த பாதுகாப்புடன் வியாழக் கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள், நேற்று எண்ணப்பட்டன. மொத்தமுள்ள 650 தொகுதிகளில் 646 தொகுதிக்கான முடிவுகள் நேற்று மாலை அறிவிக்கப்பட்டது.
 
இந்த முடிகளிப் படி, டேவிட் கேமரூன் தலைமையிலான ஆளும் கன்சர்வேடிவ் கட்சி அதிக இடங்களை பிடித்து தொடர்ந்து 2 வது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 650 தொகுதிகளில், இதுவரை 540 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 
அதில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 327 இடங்களும், மிலிபாண்ட் தலைமையில் போட்டியிட்ட தொழிலாளர் கட்சிக்கு 232 இடங்களும், நிகோலா ஸ்டர்ஜியன் தலைமையிலான ஸ்காட்டிஷ் தேசிய கட்சிக்கு 56 இடங்களும், பீட்டர் ராபின்சன் தலைமையிலான டெமாக்ரடிக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 8 இடங்களும், நிக்களெக் தலைமையிலான லிபரல் ஜனநாயக கட்சிக்கு 8 இடங்களும் கிடைத்துள்ளன.
 
இதனால், தற்போது பிரிட்டனின் பிரதமராக உள்ள, டேவிட் கேமரூன் இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமாக பதிவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.