1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Modified: வியாழன், 11 மே 2017 (15:51 IST)

பிரான்ஸ் ஜனாதிபதி ஓரினச்சேர்க்கையாளர்: டேனிஷ் முன்னாள் எம்பி சர்ச்சை கருத்து!

பிரான்ஸ் ஜனாதிபதி ஓரினச்சேர்க்கையாளர்: டேனிஷ் முன்னாள் எம்பி சர்ச்சை கருத்து!

பிரான்ஸின் புதிய அதிபராக தேர்வாகியுள்ளார் மேக்ரோன். இவரை ஓரினச்சேர்க்கையாளர் என டேனிஷ் எம்பி ஒருவர் தொலைக்காட்சி விவாதத்தின் போது பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 
 
டேனிஷ் மக்கள் கட்சியை சேர்ந்தவர் சொரென் க்ராரப் முன்னாள் எம்பியாக இருந்துள்ளார். இவர் பிரான்ஸ் நாட்டின் சமகால அரசியல் மற்றும் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் குறித்து நடந்த தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார்.
 
இந்த விவாதத்தில் சொரென் க்ராரப் கடுமையான வாதங்களை எடுத்து வைத்தார். தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தால் தாம் கண்டிப்பாக மரைன் லீ பென்னுக்கு வாக்களித்திருப்பேன் என கூறினார். மேலும் எந்த காரணத்தைக் கொண்டும் மேக்ரோன் போன்ற ஓரினச்சேர்க்கையாளர் சிறுவனுக்கு தாம் வாக்களித்திருக்க மாட்டேன் எனவும் காட்டமாக கூறினார்.
 
சொரென் க்ராரப்பின் இந்த கருத்துக்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்து வருகிறது. இவரை போன்ற நபர்களை விவாதத்துக்கு அழைத்ததற்காக அந்த ஊடகத்தினரையும் சிலர் வசைபாடி வருகின்றனர். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என மேக்ரோனின் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
 
ஆனால் மன்னிப்பு கேட்காத சொரென், அவரை நான் ஒழுக்க நிறைந்த பள்ளி சிறுவன் என கூறியிருக்க வேண்டும் என கிண்டலாக கூறியுள்ளார். இதற்கு முன்னர் சொரென் மேக்ரோனின் திருமண உறவு குறித்தும் கடும் விமர்சனத்தை வைத்துள்ளார்.