வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 29 மே 2022 (11:16 IST)

பெர்முடா பயணம்; கப்பல் மாயமானால் பணம் வாபஸ்! – கப்பல் நிறுவனம் செய்த விளம்பரம்!

ancient mysteries cruise
மர்மங்கள் நிறைந்த பெர்முடா முக்கோணம் வழியாக பயணிக்க உள்ளதாக கப்பல் நிறுவனம் ஒன்று செய்துள்ள விளம்பரம் பெரும் வைரலாகியுள்ளது.

உலகின் மர்மம் நிறைந்த பகுதிகளாக கருதப்படுபவற்றில் முக்கியமானது பெர்முடா முக்கோணம். பெர்முடா தீவு பகுதிக்கு அருகே கடல் பகுதியில் முக்கோணமாக குறிக்கப்படும் இந்த பகுதி வழியாக பயணித்த பல கப்பல்கள், விமானங்கள் இதுவரை மாயமாகியுள்ளன.

இதற்கு தொழில்நுட்ப கோளாறு, இயற்கை பேரிடர் உள்ளிட்ட பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், சதிகோட்பாட்டாளர்கள் அந்த பகுதியில் க்ராக்கன் போன்ற ஜந்து வாழ்வதாகவும், ஏலியன்கள் உலவுவதாகவும் பல்வேறு கற்பனைகளையும் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து பெர்முடா முக்கோணம் வழியாக நார்வே செல்வதாக அறிவித்துள்ளது கப்பல் நிறுவனம் ஒன்று. இந்த கப்பலில் பயணிப்பவர்களுக்கு கப்பல் பெர்முடா முக்கோணத்தில் மாயமாகும் பட்சத்தில் முழு டிக்கெட் தொகையும் திரும்ப வழங்கப்படும் என வித்தியாசமான விளம்பரம் செய்யப்பட்டுள்ளது, இந்த கப்பல் அடுத்த வருடம் மார்ச்சில் தனது பயணத்தை தொடங்க உள்ளது.