திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 12 ஆகஸ்ட் 2018 (17:28 IST)

குப்பை பொறுக்க வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள பறவைகள்!

பிரான்ஸில் உள்ள தீம் பார்க் ஒன்றில் குப்பை பொறுக்குவதற்காக ஆறு புத்திசாலி பறவைகளை பணியமர்த்தி உள்ளது அந்த தீம் பார்க் நிறுவனம். 
பறைவகள் என்றது பெரிய பறைவகள் எல்ல அல்ல அவை காகங்கல்தான். ஆம் , ஆறு காகங்களுக்கு சிகரெட்டை பொறுக்கவும், குப்பைகளை அப்புறப்படுத்தவும் பயிற்சி அளிக்கப்பட்டு மேற்கு பிரான்ஸில் உள்ள புய் டு ஃபொ தீம் பார்க்கில் பணி அமர்த்தப்பட்டுள்ளது.
 
இவை அங்குள்ள குப்பைகளை அகற்றி குப்பை தொட்டியில் போடும். இதற்கு பரிசாக அதற்கு சிறப்பு உணவளிக்கப்படும். இந்த பூங்காவின் தலைவர் நிகோலஸ், பறவைகளை கொண்டு குப்பைகளை அகற்ற வேண்டும் என்பது மட்டும் நம் நோக்கமல்ல. இயற்கையே சூழலை நமக்கு சூழலியல் குறித்து பாடம் எடுக்கிறது என்பதை உணர்த்துவதுதான் நம் நோக்கம் என்கிறார்.