வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: திங்கள், 1 செப்டம்பர் 2014 (13:51 IST)

கடும் நெருக்கடியில் நவாஷ் ஷெரீப்: பிரதமர் இல்லத்தை நெருங்கினர் போராட்டக்காரர்கள்

பாகிஸ்தான் அரசுக்குச் சொந்தமான தொலைக்காட்சி நிறுவனத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் பிரதமர் இல்லத்தை நெருங்கி வருகின்றனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் கூறி வரும் இம்ரான் கான், பாகிஸ்தா பிரதமர் நவாஷ் ஷெரீப் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கடந்த 18 நாட்களாக தலைநகர் இஸ்லாமாபாத்தில் அவரது ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்தி வருகிறார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி மத குரு தாஹிருல் காத்ரியின் அவாமி தெஹ்ரிக் கட்சியினரும்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், போரட்டாக்காரர்கள், பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சி நிறுவனத்திற்குள் புகுந்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் தலைமைச்செயலக பகுதியைத் தாண்டி பிரதமர் இல்லத்தை நெருங்கி வருவதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் அரசுக்குச் சொந்தமான தொலைக்காட்சி நிறுவனமான, பி டிவி நிறுவனத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைந்த வீடியோ அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அரசு கட்டடங்களை சேதப்படுத்தக் கூடாது என்று இம்ரான் கான், போரட்டக்காரர்களுக்கு உத்தரவிட்டதால் அவரகள் கட்டிடத்தை சேதப்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

தஹ்ரீக்-எ இன்சாப் கட்சியின் தலைவர் இமரான் கான் போராட்டக்காரர்களிடே உரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில், “பிரதமர் பொறுப்பில் இருந்து அவராகவே விலகுகிறாரா அல்லது வலுக்கட்டாயமாக விலக வேண்டுமா என்பதை நவாஷ் ஷெரீப் முடிவு செய்ய வேண்டும்“ என்று தெரிவித்தார்.

அமைதியைக் கடைபிடிக்குமாறு தனது ஆதரவாளர்களை இமரான் கான் கேட்டுக்கொண்டார். பாகிஸ்தானில் போராட்டம் தீவிரமடைந்து வருவதால், அங்குள்ள பள்ளிகன் மூடப்பட்டுள்ளன.

அத்துடன் தலைநகர் இஸ்லாமாபாத் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் பதவியை இழக்கமாட்டேன் என்று நவாஷ் ஷெரீப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.