1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Ilavarasan
Last Updated : வியாழன், 21 மே 2015 (21:27 IST)

இங்கிலாந்தில் மாட்டு சாண வாயுவில் இயங்கும் பேருந்து: மணிக்கு 123 கி.மீ. வேகத்தில் சென்று சாதனை

இங்கிலாந்தில் மாட்டு சாணத்தில் இருந்து உருவாகும் வாயுவால் இயங்கும் பேருந்து மணிக்கு 123 கி.மீ. வேகத்தில் சென்று சாதனை படைத்துள்ளது.
 
பெட்ஃபோர்டின் மில்புரோக் மைதானத்தில் நடத்தப்பட்ட இச்சோதனையில் மணிக்கு 123.57 கிலோ மீட்டர் சென்றதன் மூலம் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. பிரைசியன் மாட்டை போன்று கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும் இப்பேருந்து, அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவை மட்டுமே கொண்டு இயக்கப்படுகிறது. இதற்காக பேருந்தின் மேற்கூறையில் 7 கொள்கலன்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பொது மக்களை ஏற்றி செல்வதற்கும் இந்த பேருந்து பயன்படுத்தப்படுகிறது.
 
இது பற்றி பேருந்தின் தலைமை பொறியாளர் ஜான் பிக்கெட்டான் கூறுகையில் "வேகத்தை விட எங்களின் மிக முக்கியமான நோக்கம் பேருந்து போக்குவரத்தில் இருக்கும் புகை, துர்நாற்றம் மற்றும் மெதுவாக செல்வது ஆகிய குறைகளை நீக்கவேண்டும் என்பது தான்" என தெரிவித்துள்ளார்.