வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 6 டிசம்பர் 2022 (18:50 IST)

கோவிட்-19 மனிதர்களால் உருவாக்கப்பட்டது- அமெரிக்க ஆய்வாளர் தகவல்

கோவிட் -19 எனும் கொரொனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான்  என்ற தகவலை வூஹான் மாகாண ஆய்வுகூடத்தில் பணியாற்றிய  நபர் தன் புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
 

கடந்த 2019 ஆம் ஆண்டு சீன தேசத்தில் இருந்து இந்தியா உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளுக்கும் கொரோனா தொற்றுப் பரவியது.

இதனால், உலகம் முழுவதும்  பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டு, லட்சக்கணகான மக்கள் உயிரிழந்தனர்.

கொரொனாவின் உருமாறிய  வைரஸ் மேலும் பல நாடுகளிலும் பரவி வரும் நிலையில், இதன் 5 ஆம் அலை விரைவில் பரவலாம் என  உலக சுகாதார அமைப்பு எச்சரித்தது.

இந்த நிலையில், சீனாவில் மீண்டும் கொரொனா பரவல் அதிகரித்துள்ள  நிலையில், குளிர்காலம் என்பதாலும், பண்டிகை காலம் என்பதாலும், பல நாடுகளில் மக்கள் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பதாக WHO கூறியுள்ளது.
 

இந்த நிலையில்,  சீனா நாட்டில் வூஹான் ஆய்வகத்தில் பணியாற்றி வந்த அமெரிக்க ஆய்வாளர் ஆண்ட்ரூ ஹாஃப், தன் The Truth About Wuhan என்ற புத்தகத்தில், கோவிட் -19 எனும் கொரொனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்ற உண்மையைத் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த வைரஸ் சீனா ஆய்வகததில் அமெரிக்க  நாட்டின் நிதி உதவியுடந்தான் செய்யப்பட்டது என்றும் அப்போது, போதிய ஆய்வக மேம்பாட்டிற்கு நிதி வசதி இல்லாததால் வைரஸ் அங்கிருந்து கசிந்து, உலகம் முழுவதும் பரவிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj