வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 20 ஜூலை 2017 (15:05 IST)

75 ஆண்டுகளுக்கு பிறகு பனிமலையில் கண்டெடுக்கப்பட்ட தம்பதியரின் சடலம்!!

1942 ஆம் ஆண்டு காணாமல் போன தம்பதியரின் உடல்கள் நல்ல நிலையில் ஸ்விட்ஸர்லாந்த் பனிமலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 


 
 
கடல் மட்டத்தில் இருந்து 8,500 அடிக்கு மேல் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடர் ஒரு சுற்றுலா தளம். அங்குள்ள சுற்றுலா விடுதியின் ஊழியர்கள் பனி ஆற்றுப்பகுதியில் கண்ணாடி பாட்டில்களையும், ஷூக்களையும் கண்டெடுத்தனர். 
 
அப்போது அந்த இடத்தில் தோண்டி பார்த்த போது இரு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்து அந்த தம்பதியினர் பெயர் மர்செலின் மற்றும் ப்ரான்சின் டுமெளலின் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
 
மாடு மேய்க்க சென்றவர்கள் அப்படியே காணாமல் போய்விட்டனர் என அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். பனிப்புயலில் சிக்கி அவர்கள் பலியாகியிருக்கக் கூடும் என்று தெரிகிறது.