1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 25 பிப்ரவரி 2015 (14:55 IST)

பங்ளாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு கைது வாரண்ட்

பங்ளாதேஷ் முன்னாள் பிரதமரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான கலிதா  ஜியா ஊழல் வழக்கில் ஆஜராகாததால் அவரை கைது செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
பங்ளாதேஷ் முன்னாள் பிரதமரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான கலிதா ஜியா, அவரது கணவர் பெயரில் உள்ள ஆதரவற்றோர் அறக்கட்டளையில் நிதி மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.
 
இந்த வழக்கில், டாக்கா ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் கடந்த ஐந்து மாதங்களாக நடைபெற்று வந்தது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிமன்றத்தில் கலிதா ஜியா ஆஜராகவில்லை.
 
இதையடுத்து கலிதா ஜியாவின் ஜாமீனை ரத்து செய்த நீதிமன்றம், அவருக்கு கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.
 
பங்ளாதேஷில், கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் கலிதா ஜியா பந்த் நடத்தி வரும் நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.