1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : சனி, 6 பிப்ரவரி 2016 (10:49 IST)

கருத்தடை, கருக்கலைப்புக்கு அனுமதி வழங்க வேண்டும்: சர்வதேச நாடுகளுக்கு ஐ.நா கோரிக்கை

ஜிகா வைரஸ் பாதித்த நாடுகளில் வசிக்கும் பெண்கள் கருத்தடை மற்றும் கருக்கலைப்பு செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது.


 

 
ஜிகா வைரஸ் தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவை சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.
 
இந்த நோய், கர்ப்பிணிகளை தாக்கி பிறக்கக்கூடிய குழந்தையை பாதிப்படையச் செய்கிறது. இதனால் குழந்தையின்  மூளையில் பாதிப்பு மற்றும் பிற பிறவிக்குறைபாடுகளும் ஏற்படுகிறது.
 
இந்த கொடிய ஜிகா வைரஸ், வேகமாக பரவி வருவது குறித்து உலக சுகாதார அமைப்பு ஆலோசனை நடத்தியது.
 
பின்னர் சர்வதேச நெருக்கடி நிலையையும் பிரகடனம் செய்துள்ளது. இந்நிலையில்,  ஜிகா வைரஸ் பாதிப்புள்ள நாடுகள் தங்கள் நாட்டு குடிமக்களை கருதரிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
 
இந்நிலையில், ஜிகா வைரசால் பாதிப்புக்குள்ளான நாடுகளில் கருத்தடை, மற்றும் கருக்கலைப்பு செய்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று ஐ.நா கோரிக்கை விடுத்துள்ளது.
 
தற்போது கொலம்பியாவில் ஜிகா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்தறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.