1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 3 ஏப்ரல் 2019 (13:12 IST)

ஈரானில் வரலாறு காணாத மழை – 47 பலி…. லட்சக்கணக்கானோர் பாதிப்பு !

ஈரானில் கடந்த 10 நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் இதுவரையில் 47 பேர் வரை பலியாகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஈரானில் கடந்த 10 நாட்களாக கடுமையாக மழை பெய்டு வருகிறது. கடந்த பத்து வருடங்களில் ஈரானில் பெய்யாத மழையாக இது பதிவாகி உள்ளது. இந்த மழைக்கு இதுவரை 47 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள் இருப்பிடங்களை இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தொடர் மழை காரணமாக ஈரானில் உள்ள அணைகளில் 95% நிரம்பிவிட்டதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது. வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது,  ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையினால் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு தேவையான பொருட்களைக் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரானின் வெளியுறவுத் துறை தலைவர் ஜாவத் சாரிஃப் கூறும்போது, “ அமெரிக்கா ஈரானுக்கு கிடைக்க வேண்டிய அவசர உதவிகளை தடுத்துள்ளது. இது பொருளாதார தடை அல்ல, பொருளாதார தீவிரவாதம்” என்று தெரிவித்துள்ளார்.