Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஒயின் குடிப்பவரா நீங்கள்? அப்போ அவசியம் படிங்க!!

வெள்ளி, 2 டிசம்பர் 2016 (10:49 IST)

Widgets Magazine

அளவுக்கு அதிகமாக ஒயின் அருந்துவோர் குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர்கள் குழு, விரிவான ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. 


 
 
அதில், சர்வதேச அளவில் உள்ள புற்றுநோயாளிகளில், 3.6% பேர் மதுப்பழக்கம் கொண்டவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், அளவுக்கு அதிகமாக ஒயின் அருந்துவோருக்கு தோல் புற்றுநோய் ஏற்படும் என்று, ஆய்வில் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.
 
அதிகளவில் ஆல்கஹால் உடலில் சேர்வதால், சூரிய ஒளி போன்றவற்றை தோலுக்குள் ஊடுருவச் செய்யாமல் தடுத்து விடுகிறது. 
 
இதனால், உடலின் இயக்க விதிகளில் மாற்றம் ஏற்படுகிறது. இது படிப்படியாக, புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
பொதுவாக, வெள்ளை நிற ஒயின் அருந்துவோருக்கே, உடலில் இத்தகைய புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும், ரெட் ஒயினில் அதிக நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளதால் இந்த பாதிப்பு ஏற்படாது எனவும் அமெரிக்கப் பேராசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
 
இது மட்டுமின்றி, ஒயின் உள்ளிட்ட ஆல்கஹால் உணவுப் பொருட்களால், மனித உடலில் உள்ள டிஎன்ஏ செயல்பாடு வெகுவாகப் பாதிக்கவும் வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்து உள்ளனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

அப்பாவும் சித்தப்பாவும் சேர்ந்து மகளை சீரழித்த அவலம்!

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் 42 வயதான நபர் ஒருவர் அவரது மகளை பலாத்காரம் செய்ததாக ...

news

மேற்கு வங்கத்தில் ராணுவம் குவிப்பு: மம்தா உள்ளிருப்பு போராட்டம்!

மேற்கு வங்க மாநிலத்தின் தலைமை செயலகம் மற்றும் அம்மாநிலத்தின் சில மாவட்டங்களிலும் ராணுவம் ...

news

பேசாமல் இருக்கும் கருணாநிதி: காரணம் என்ன?

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் நேற்று ...

news

19 வருடம் வாழ்ந்து வந்த மனைவி பெண் அல்ல ஆண்: அதிர்ச்சியில் கணவன்

மோனிகா என்பவர் பாலியல் மாற்று சிகிச்சை மூலம் பெண்ணாக மாறிய ஆண். இவர் ஜேன் என்பவரை ...

Widgets Magazine Widgets Magazine