Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பீர் பாட்டில் மூடியை விழுங்கிய நபர்; சிகிச்சைக்கு அதை பயன்படுத்திய டாக்டர்!!


Sugapriya Prakash| Last Updated: செவ்வாய், 10 ஜனவரி 2017 (11:16 IST)
தவறுதலாக விழுங்கிய பீர் பாட்டில் மூடியை, காண்டம் உதவியுடன் டாக்டர் வெளியே எடுத்த சம்பவம் சீனாவில் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 
 
சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜியாங்க்சூ மாகாணத்தைச் சேர்ந்தவர் லியு. இவர், நண்பர்களுடன் சேர்ந்து அவ்வப்போது, மது அருந்துவது வழக்கம். 
 
இந்நிலையில், சில நாட்கள் முன்பாக, லியு பீர் குடித்துள்ளார். வயிறு முட்ட பீர் குடித்தவர் அதோடு சேர்த்து பீர் பாட்டில் மூடியையும் விழுங்கிவிட்டார். இதையடுத்து, அவர் அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 
 
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வயிற்றில் சிக்கிக் கொண்ட பீர் பாட்டில் மூடியை எப்படி வெளியே எடுப்பது என நீண்ட நேரம் விவாதித்தனர். பின்னர், காண்டத்தை பயன்படுத்தி இதை சரி செய்யலாம் என முடிவுக்கு வந்தனர்.
 
பின்னர், அறுவை சிகிச்சையின் போது காண்டம் வாய்ப்பகுதியை படிப்படியாக வயிற்றுக்குள் விட்டு, அதற்குள் காற்றை ஊதியதும், நீளமாக உப்பியிருந்த காண்டத்தின் முனையில் பாட்டில் மூடி சிக்கியது. பின்னர் அது காண்டத்திற்குள் வந்துவிட்டது. இதனை மெதுவாக, வெளியே எடுத்து அறுவை சிகிச்சையை டாக்டர்கள் வெற்றிகரமாய் முடித்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :