பேஸ்புக் மீது குவியும் புகார்கள்... தகவல் திருட்டு எதிரொலி... என்ன செய்வர் மார்க் ஜூகர் பெர்க் ?

facebook
Last Updated: சனி, 7 செப்டம்பர் 2019 (20:36 IST)
இன்றைய இணையதள உலகில் கொடிகட்டிப் பறக்கும் ஒரு சமூக வலைதளம் ஃபேஸ்புக்தான். இது இளைஞர்களின்  சமூகவலைதளப் பொழுதுபோக்கு  பூங்காவாகவே மாறியுள்ளது.
இந்நிலையில் ஃபேஸ்புக் வளர்ச்சி அதன் வாடிக்கையாளரின் நாலாவட்ட தொடர்பு எண்ணிக்கை அதன் வளர்ச்சி, வியாபாரம் இதெல்லாமல் இருந்தாலும் கூட, இந்த நிறுவனம் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதும் வாடிக்கையாக உள்ளது.
 
ஃபேஸ்புக் தகவல்கள் திருட்டுபோவதாக ஏற்கனவே அதன் பயனாளர்களிடமிருந்து புகார்கள் எழுந்தது. இதற்காக அமெரிக்கா நாடாளுமன்றத்தில்,  ஃபேஸ்புக்கின் நிறுவனர் மார்கிடம் , அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதற்கு இனிமேல் இதுபோல் தகவல் திருட்டு நடக்காது என உறுதி அளித்தார்.
 
இந்நிலையில், தற்போது, டெக் க்ரஷ் என்ற ஊடகம்  ஃபேஸ்புக் குறித்து வெளியிட்டுள்ள தகவல்கள் பலத்த சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. அதில், உலகெங்கிலும் உள்ள சுமார் 42 கோடி ஃபேஸ்புக்  வாடிக்கையாளர்களின் மொபல் எண்கள், மற்றும் அவர்கள் தகவல்கள்  திருடப்பட்டுள்ளதாகவும், இதில் 12 கோடிப்பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் எனவும்  தெரிவித்துள்ளது.
 
ஆனால் டெக் க்ரஷின் குற்றச்சாட்டில் கூறியுள்ள 42 கோடிப்பேர் என்ற அந்த வெண்ணிக்கையை  ஃபேஸ்புக் சுத்தமாக மறுத்துள்ளது. இருப்புனும் தனது நம்பகத்தன்மையை ஃபேஸ்புக் நிறுவனம் இழந்து வருகிறது அதன் தகவல்கள் திருட்டிலேயே தெரிவதாகப் பலரும் கருத்துக்கூறி வருகிறார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :