வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : புதன், 29 ஜனவரி 2020 (21:30 IST)

ரஷியாவில் பனியில் புரண்டு விளையாடி சர்க்கஸ் !

ரஷியாவில் சர்க்கஸ் நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்ற யானைகளில் ஒன்று,அங்குள்ள சாலைகளில் இருந்த பனியில் புரண்டு விளையாடிய யானையின் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.
ரஷியா நாட்டில் உள்ள இத்தாலி சர்க்கஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது கார்லா. ரன்னி ஆகிய யானைகள் . இங்குள்ள யாக்டெரின்பர்க் நகரில் சர்க்கஸ் காட்சி தற்போது நடைபெற்று வருகிறது.
 
இந்த யானைகளை கண்காட்சிக்கு அழைத்துச் செல்வதற்காக கார்லா, ரன்னி யானைகளை சர்க்கஸ் ஊழியர்கள் லாரியில் ஏற்ற முயன்றனர்.
 
அப்போது, யானைகள் ஏற மறுத்த யானைகள் பனியில் முன்னங்கால்களை மடக்கி உட்கார்த்து விளையாடியது. இதை பலரும் வீடியோ எடுத்து வைரல் ஆக்கினர்.