1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 2 ஏப்ரல் 2018 (09:50 IST)

பசுபிக் கடலில் விழுந்தது சீனாவின் விண்கலம்

விண்வெளி ஆய்வுக்காக சீனாவால் அனுப்பப்பட்ட விண்வெளி ஆய்வு மையமான டியாங்காங் 1 தெவ் இன்று பூமியில் விழும் என்று வெளிவந்த செய்தியினை சற்றுமுன்னர் பார்த்தோம். இந்த நிலையில் இந்த விண்கலம் சில நிமிடங்களுக்கு முன்னர் பசிபிக் கடலில் விழுந்து நொறுங்கியதாக உறுதி செய்யப்பட்ட தகவல் வெளிவந்துள்ளது.

ஒரு பேருந்து அளவிலான இந்த விண்வெளி ஆய்வு மையம், பூமியின் வான்பரப்பில் 70 கி.மீ., தொலைவில் நுழைந்த போது காற்றின் உராய்வு காரணமாக எதிர்பாராத வகையில் தீப்பிடித்தது. இதனால் விண்கலம் எரிந்து உருகிய நிலையில் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி பூமியில் விழும் என்று எதிர்ர்பார்க்கப்பட்டது. இதன்படி இந்த ஆய்வு மையம், சீன நேரப்படி இன்று காலை 8.15 மணிக்கு பசிபிக் கடலில் விழுந்துள்ளது. இந்த தகவலை சீன ஆய்வு கழகம் உறுதி செய்துள்ளது.

விண்வெளி ஆய்விற்கான கடந்த 2011 ம் ஆண்டு சீனா அனுப்பிய இந்த விண்வெளி ஆய்வு மையம் 2013ஆம் ஆண்டே தனது  செயல்பாட்டை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.