வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 26 பிப்ரவரி 2015 (16:17 IST)

ஆயிரம் ஆண்டுகளாக புத்தர் சிலைக்குள் அமர்ந்திருந்த சீனத் துறவி

நெதர்லாந்து நாட்டில் ஆயிரம் ஆண்டுகளாக புத்தர் சிலைக்குள் அமர்ந்திருந்த சீனத் துறவி ஒருவரின் உடலை கண்டுபிடித்துள்ளனர்.
 
நெதர்லாந்து நாட்டின் அசென் நகரிலுள்ள ட்ரெண்ட்ஸ் அருங்காட்சியகத்தில் இருந்த புத்தர் சிலை ஒன்றை அதிநவீன பரிசோதனைக்கு உட்படுத்தினர். அப்போது, புத்தர் சிலைக்கு உள்ளே அமர்ந்தவாறு எலும்புக்கூடு ஒன்று இருப்பதை ஆராய்ச்சியாளர்கள்  கண்டுபிடித்தனர்.

 
இதை மேலும் பரிசோதனை செய்ததில், பதினோறாம் நூற்றாண்டை சேர்ந்த சீனத்துறவி ஒருவரின் உடலை அமர்ந்த நிலையில் பதப்படுத்தி, அதன் மேல் புத்தர் சிலையை வடிவமைக்கப்பட்டு உள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 
 
இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ”இந்த எலும்புக் கூடுகளை ஆய்வு செய்கையில், இவர் சீனாவில் புகழ்பெற்ற  சோகுஷின்புட்சு என்ற கலையை பயில்வித்த மாஸ்டர் லியு குவான் என்ற துறவியாய் இருக்கலாம் என யூகிக்கிறோம்.
 

 
இந்த துறவி இறப்பிற்கு பின், இவரது உடல் புத்தர் சிலைக்குள் வைக்கப்பட்டு இருக்கலாம் அல்லது இவரே அமர்ந்த நிலையில் இறந்து அதன் மேலாக புத்தர் சிலையை அமைக்க கூறியிருக்கலாம். எனினும் இதை உறுதி செய்ய கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூட்டின் ஒரு பகுதியை மரபணு சோதனைக்கு அனுப்பியுள்ளோம்” என கூறியுள்ளனர்.
 
தற்போது, இந்த புத்தர் சிலையை, ஹங்கேரி நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள அருங்காட்சியகத்தில் மே மாதம் வரை கண்காட்சிக்கு வைக்கப்படும் என ஆராய்ச்சியளர்கள் தெரிவித்துள்ளனர்.