வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 7 ஜூன் 2024 (18:26 IST)

இதுல கூட டூப்ளிகேட்டா? பைப் தண்ணீரை ஊற்றி அருவி என ஏமாற்றிய சீனா? – கடுப்பான பயணிகள்!

Yuntai waterfalls
சீனாவின் மிக உயரமான அருவி என பெயர் பெற்ற அருவியில் செயற்கையாக நீர் ஊற்று உருவாக்கப்பட்டுள்ள சம்பவம் வெளியாகி வைரலாகி வருகிறது.



பொதுவாக ஏதாவது ப்ராண்டட் பொருட்களின் டூப்ளிகேட் பதிப்புகள் சந்தையில் விற்றால் அதை ‘மேட் இன் சைனா’ என சொல்வார்கள். அந்த அளவுக்கு பிரபல மின்சாதன நிறுவனங்கள் பெயரில் சைனாவிலிருந்து போலியான தயாரிப்புகள் உலகம் முழுவதும் பரவியுள்ளன. தற்போது மின்சாதனங்களில் மட்டுமல்லாமல் இயற்கையான மலை, அருவிகளில் கூட டூப்ளிகேட் தயாரிக்கும் வேலைகளையும் செய்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் செயற்கையான டூப்ளிகேட் நிலவு ஒன்றை தயாரித்து சீனாவுக்கு மேலே பறக்கவிட சீனா திட்டமிட்டு பின் முடிவை ரத்து செய்தது. ஒரு சீனாவின் மிருகக்காட்சி சாலையில் நாய்க்குட்டிக்கு பாண்டா போல பெயிண்ட் அடித்து ஏமாற்றினார்கள். அப்படியான டூப்ளிகேட் விவாதத்தில் சீனாவின் மிக உயரமான அருவி என பெயர்பெற்ற யுண்டாய் மலை அருவி சிக்கியுள்ளது.


314 மீட்டர் உயரமுள்ள இந்த யுண்டாய் நீர்வீழ்ச்சி யுண்டாய் மலை பூங்கா பகுதியில் அமைந்துள்ளது. ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளையும் கவரும் வகையில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். ஏராளமான சுற்றுலா பயணிகள் இதற்கு 5 ஸ்டார் ரேட்டிங்கும் கொடுத்திருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் அந்த அருவியின் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. அதில் அந்த அருவியில் இயற்கையாக நீர் கொட்டாமல் மேல் உள்ள ஒரு பெரிய பைப் மூலமாக தண்ணீர் கொட்டுவது பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ ஷேர் ஆன நிலையில் மின்சாதன பொருட்களில்தான் டூப்ளிகேட் செய்கிறீர்கள் என்றால், இயற்கையான அருவியில் கூடவா என பலரும் சீனாவை கிண்டல் செய்துள்ளனர். தற்போது கோடைக்காலம் என்பதால் தண்ணீர் வரத்து இல்லாததால் பயணிகள் ஏமாறக் கூடாது என்பதற்காக பைப் மூலம் தண்ணீர் ஊற்றியதாகவும், மற்றபடி அது உண்மையான நீர்வீழ்ச்சிதான் என்றும் சமாளித்துள்ளது யுண்டாய் மலை பூங்கா நிர்வாகம்.

Edit by Prasanth.K