வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 23 நவம்பர் 2015 (15:42 IST)

சீனாவின் பொருளாதாரா மந்தநிலை இந்தியாவை பாதிக்கும் - ரகுராம் ராஜன்

சீனாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை இந்தியாவையும் பாதிக்கும் என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து ரகுராம் ராஜன் `சீனா மார்னிங் போஸ்ட்’ பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், சீனாவில் ஏற்பட்டுள்ள மந்த நிலை என்பது ஒட்டுமொத்த உலகத்துக்கும் விடுக்கப்பட்ட ஓர் எச்சரிக்கை. இந்தியாவில் இருந்து சீனாவுக்கு செல்லும் ஏற்றுமதிகள் பாதிக்கப்படக்கூடும்.
 
சீனாவில் ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாக உலகம் முழுவதிலும் வளர்ச்சி குறையும். இந்திய பொருளாதாரத்தை உலக பொருளாதாரத்திலிருந்து பிரிக்க முடியாது. அதனால் இந்தியாவிலும் பாதிப்பு இருக்கும். கடந்த காலங்களில் சீனா அடைந்த வளர்ச்சி விகிதத்தை இந்தியாவும் அடையும்.
 
சீனா செய்த சரியான நடவடிக்கைகளில் இருந்து இந்தியா கற்றுக்கொள்ளும். சீனாவின் உற்பத்தி துறையை பற்றி நாங்கள் கற்றுக்கொள்ள விரும்புகிறோம். அதேபோல அந்நிய நேரடி முதலீட்டை பெறுவதிலும் சீனா முன்னணியில் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
 
சீனா தனது நாணய மதிப்பை குறைத்தது பற்றிய கேள்விக்கு, ”சர்வதேச செலாவணி மையம் சீனாவிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறது என்று தெரியவில்லை. ஆனால் முக்கியமான நாடுகளின் நாணயங்கள் சர்வதேச வர்த்தகத்துக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்று ஐஎம்எப் எதிர்பார்க்கிறது. அதை நோக்கி சீனா நகர்ந்து கொண்டிருக்கிறது” என்றார்.