வியாழன், 6 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (14:42 IST)

சாலையில் வாகனங்களை விழுங்கியபடி செல்லும் பஸ் (வீடியோ)

போக்குவரத்து நெரிசலை குறைக்க சீனாவில் புதிதாக பஸ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர்


 

 
சீனாவில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுக்காண, நவீனரக டிராம் வடிவ பஸ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இது சாலையில் செல்லும் போது அதன் அடி பகுதியில் வாகனங்கள் புகுந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
 
60.60 மீட்டர் நீளம், 7.80 மீட்டர் அகலம், 4.50 மீட்டர் உயரம் கொண்ட இந்த பஸ், பேட்டரிகளால் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. சுரங்கப்பாதை பாதை போன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த பஸ் டிராம் தண்டவாளம் போன்ற இரும்பு பாதையில் ஓடுகிறது. 
 
மேலும் வருங்காலத்தில் இந்த பஸ் ஓட்டுநர் இல்லாமல் தானாக இயங்க வைக்கு முயற்சி நடைப்பெற்று வருகிறது.
 

நன்றி: New China Tv