1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva

சீன விமான விபத்தில் 132 பயணிகளும் உயிரிழப்பா? அதிர்ச்சி தகவல்!

நேற்று சீனாவின் பயணிகள் விமானம் மலையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 137 பயணிகளும் உயிரிழந்திருக்கலாம் என்று அச்சம் ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
சீனாவை சேர்ந்த போயிங் விமானம் நேற்று மலையில் விழுந்து நொறுங்கிய நிலையில் மீட்புப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.
 
இந்த விமானத்தில் பயணம் செய்த 137 பயணிகள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்று சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது 
 
விமான விபத்து நிகழ்ந்து 15 மணி நேரத்திற்கு மேலாகியும் இதுவரை உயிரிழப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை என்பதால் சீன ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது