Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நோபல் பரிசு: மருத்துவம் போலவே வேதியியலுக்கும் மூன்று பேர்


sivalingam| Last Modified புதன், 4 அக்டோபர் 2017 (23:26 IST)
2017ஆம் ஆண்டின் நோபல் பரிசுகள் ஒவ்வொரு துறைக்கும் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் நாட்டின் நோபல் பரிசு நிர்வாகிகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மருத்துவத்திற்கான நோபல் பரிசை மூன்று அமெரிக்கர்கள் வென்றதாக அறிவித்தனர்


 
 
இந்த நிலையில் மருத்துவத்தை அடுத்து வேதியியலுக்கான நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசு ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ஜாக்ஸ் துபோசே, அமெரிக்காவைச் சேர்ந்த ஜோகிம் பிராங்க், லண்டனை சேர்ந்த ரிச்சர்ட் ஹெண்டர்சன் ஆகிய மூவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 
 
இவர்கள் மூவரும் உயிர் மூலக்கூறு வடிவங்களை எளிமையாக படம்பிடித்து ஆய்வில் நுணுக்கங்களை அதிகரிக்க மேம்பட்ட முறையிலான கிரையோ எலக்ட்ரான் மைக்ரோஸ்கோபியை கண்டுபிடித்துள்ளனர்.
 
இதுவரை உயிர்வேதியியல் வரைபடங்கள் உயிரிகளின் மூலக்கூறு அமைப்புகளை பார்க்க எந்தகருவியும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் இம்மூவர் கண்டுபிடித்த கிரையோ-எலெக்ட்ரான் மைக்ரோஸ்கோப் மூலம் மருத்துவத்துறையில் புரட்சி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :