வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 4 ஜூலை 2021 (14:35 IST)

ஆப்பிரிக்க நாடுகளில் ஐந்தாவது அலைகூட தாக்கக்கூடும்: நிபுணர்கள் கவலை!

இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வீசி வருகிறது என்பது ஒரு சில நாடுகளில் மூன்றாவது அலை தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது 
 
இந்தியாவில் மூன்றாவது அலை இந்த ஆண்டு இறுதியில் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது ஆனால் அதற்கு முன் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டால் மக்கள் பயமில்லாமல் இருக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் ஆப்பிரிக்க நாடுகளில் தடுப்பூசி கடும் தட்டுப்பாடு உள்ளதாக கூறப்படுகிறது. வளர்ந்த நாடுகள் மற்றும் பணக்கார நாடுகள் கொரோனா தடுப்பூசிகளை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்துக் கொண்டதால் ஆப்பிரிக்க நாடுகளுக்கு தடுப்பூசி கிடைக்கவில்லை என அந்நாட்டின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர் 
 
இந்த நிலையில் ஆப்பிரிக்க நாட்டில் இன்னும் ஏராளமானவர்களுக்கு தடுப்பூசி போட வில்லை என்பதால் அங்கு நான்காவது அலை மட்டுமின்றி ஐந்தாவது அலையும் வரும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்