1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Modified: திங்கள், 8 பிப்ரவரி 2016 (14:00 IST)

சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்த கார் : அதிர்ச்சி வீடியோ

ஒரு குடும்ப உறுப்பினர்கள், சாலையில் சென்று கொண்டிருந்த போது தீடீரென நடுரோட்டில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது.


 
 
தென் அமெரிக்க நாடான பெரு நாட்டில், டிருஜில்லோ என்ற பகுதியில் ஒரு குடும்பம் தங்கள் காரில் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் சென்று கொண்டிருந்த சாலையில் திடீரென பள்ளம் தோன்றியது. இதனால் அவர்களின் கார் அந்த பள்ளத்தில் சிக்கிக் கொண்டது. அந்த பள்ளம் 16 அடி உயரத்திற்கு இருந்தது.
 
அவர்களின் அலறல் சத்தங்களை கேட்ட பொது மக்கள் ஒன்று கூடி அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஒருவழியாக அந்த காரில் இருந்து 2 வயது சிறுமி உட்பட மூன்று பேர்களை அவர்கள் மீட்டனர்.
 
இந்த சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது. அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...