1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 25 மே 2021 (12:22 IST)

வெட்டுக்கிளிகளை போல லட்ச கணக்கில் எலிகள்! – அதிர்ச்சியில் ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியாவின் கிராமப்புற, விவசாய பகுதிகளில் லட்சக்கணக்கான எலிகள் புகுந்து அட்டகாசம் செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பரவல் கடந்த சில ஆண்டுகளாக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆஸ்திரேலியா கொரோனாவுடன் ஒரு பக்கம் தண்ணீர் பஞ்சம், மறுபுறம் காட்டுத்தீ உள்ளிட்ட சேதாரங்களையும் கடந்த ஆண்டு சந்தித்தது. இந்நிலையில் தற்போது வேளாண்மைக்கு எலிகள் பெரிய அச்சுறுத்தலாகி உள்ளன.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் உள்ளிட்ட உட்புற வேளாண் மண்டலங்களில் கானிபல் சுண்டெலிகள் எனப்படும் குட்டி வகை எலிகள் பல லட்ச கணக்கில் பெருகியுள்ளதோடு வேளாண் நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள உணவு பொருட்களையும் அழித்து வருகின்றன.

இந்த எலிகளை ஒழிப்பதற்காக விவசாயிகள் பலர் வயலையே கொழுத்து விடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனாலும் எலி தொல்லை குறைவதாக இல்லை. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில் இந்த எலிகளை ஒழிப்பது குறித்து ஆஸ்திரேலிய அரசாங்கமும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.