1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 7 மார்ச் 2025 (08:43 IST)

கனடாவின் பதிலடி எதிரொலி.. ஒரு மாதத்திற்கு வரி விதிப்பை ஒத்திவைத்த டிரம்ப்..!

trump
கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கும் நடைமுறையை சமீபத்தில் அமெரிக்க அதிபர் கொண்டு வந்தார். ஆனால், தற்போது அந்த திட்டத்தை ஒரு மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த வரி விதிப்பை எதிர்த்து, கனடாவும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதே 25% வரி விதித்தது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, வரி விதிப்பதை ஒத்திவைப்பதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து, கனடாவும் அமெரிக்கா பொருட்களுக்கான வரி விதிக்கும் நடைமுறையை ஒத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில், ஏப்ரல் 2ம் தேதி வரை இரு நாடுகளும் பரஸ்பரம் அதிக வரி விதிப்பதை ஒத்திவைக்க ஒப்புக்கொண்டுள்ளன.

ஆனால், இது ஒரு மாதத்திற்கே மட்டுமே அமலில் இருக்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஏப்ரல் 2ம் தேதி பிறகு என்ன நடக்கும் என்பது கவனிக்க வேண்டிய விஷயமாகும்.

அமெரிக்காவின் அதிக வரி விதிப்பு காரணமாக, போர்ட், ஜெனரல் மோட்டார்ஸ் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் அதிபரை நேரில் சந்தித்து, வரி விதிப்பை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்தன. இதன் பின்னணியில் தான் ஒத்திவைப்பு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Edited by Siva