வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 19 செப்டம்பர் 2024 (11:41 IST)

ஸ்டெடி பர்மிட்’ அனுமதியை குறைக்கும் கனடா அரசு.. இந்தியர்களுக்கு பாதிப்பா?

Canada PM
தங்கள் நாட்டில் தற்காலிக குடியிருப்பு வாசிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் ‘ஸ்டெடி பர்மிட்’ அனுமதியை குறைக்கும் வகையிலான நடவடிக்கையை கனடா அரசு முன்னெடுத்துள்ளது . இது இந்தியர்களை பெருமளவு பாதிக்கச் செய்யும் என சொல்லப்படுகிறது.

இது குறித்த அறிவிப்பை அண்மையில் வெளியிட்ட கனடா அரசு, ‘மாணவர்களின் பர்மிட் மட்டுமின்றி வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கான அனுமதி அளிக்கும் விதிகளிலும் சில மாற்றங்களை   மேற்கொண்டுள்ளதாக  அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு 35 சதவீதத்துக்கும் குறைவான சர்வதேச மாணவர் பர்மிட்களை நாங்கள் வழங்குகிறோம். அடுத்த வருடம் இந்த எண்ணிக்கை 10 சதவீதம் குறையும். கனடாவுக்கு வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் வருவது பொருளாதாரத்துக்கு வலு சேர்க்கும். ஆனால் அதே நேரத்தில் மாணவர்களை தவறான பாதையில் சிலர் பயன்படுத்திக் கொள்வதை அனுமதிக்க முடியாது. அதனால் தான் வெளிநாட்டவரை அனுமதிப்பதில் விதிகளை மாற்றி உள்ளோம்” என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு கனடாவில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் கருத்துக் கணிப்பு ட்ரூடோ கட்சிக்கு சாதகமாக இல்லை என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



Edited by Mahendran