பேருந்து கவிழ்ந்து விபத்து 33 பேர் பலி - 43 பேர் படுகாயம்
நேபாளத்தில் மலைப்பாதையில் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 300 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில்25 பேர் பலியாயினர். 43 பேர் காயமடைந்தனர்.
நேபாள் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து கட்டிகே தியுரலி நோக்கி மலைப்பாதை வழியாகச் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து மலைப்பாதையில் இருந்து 300 மீ பள்ளத்தில் கவிழ்ந்தது.
திங்களன்று பகல் 12.15 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்தில் 26 பேர் பலியாயினர், பலியானவர்களில் 25 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுவிட்டன.
பேருந்துக்கு உள்ளேயும், கூரையிலுமாக மொத்தம் 85 பயணிகளுக்கு மேற்பட்டோர் பயணித்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் காத்மாண்டு மற்றும் துளிகேல் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.