1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 8 செப்டம்பர் 2022 (21:59 IST)

பொதுமக்கள் மீது சகோதரர்கள் கத்திக் குத்து: 18 பேர் காயம்....

கனடாவின் சஸ்காட் செவன் மாகாணத்தில் பொதுமக்கள் மீது2  சகோதரர்கள் கத்தியால் தாக்கினார். இதில், பல காயம் அடைந்துள்ளனர்.

கனடா நாட்டிலுள்ள சாஸ்காட் செவன் என்ற மாகாணத்தில் பொதுமக்கள் நிறைந்த பகுதிக்கு வந்த டேமியன் சாண்டர்சன், மைல்ஸ் சாண்டர்சன்,  ஆகியோர்  திடீரென்று கத்தியால் குத்தினர்.

இதில்,18 பேர் காயம் அடைந்தனர், அருகிலுள்ளோர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுட் வருகிறது.

இரு சகோதர்களையும் போலீஸார் தேடி வந்த நிலையில், அவர்கள் இருவரில்  டேமியன் சாண்டர்சன் பகுதியில் பிணமாகக் கிடந்தார். அவரரை  யாராவது அடித்துக் காயப்படுத்தி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில்,

தலைமறைவாக இருந்த மைல்ஸ் சாண்டர்சனை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் கடந்த பிப்ரவரியில் ஒரு குற்றவழக்கில் தண்டனை பெற்று, பரோலில் வெளியே வந்ததாகக் கூறப்படுகிறது.