காதல் திருமணம் செய்து கொண்ட தங்கை ; விருந்திற்கு அழைத்து கொலை செய்த சகோதரன்


Murugan| Last Updated: செவ்வாய், 11 ஜூலை 2017 (12:55 IST)
வீட்டை விட்டு ஓடிப்போய் காதலனை திருமணம் செய்து கொண்ட தங்கையை, விருந்து தருவதாக வீட்டிற்கு அழைத்து, அவரது சகோதரனே கத்தியால் குத்தி கொலை செய்த விவகாரம் பாகிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 
பாகிஸ்தான் நட்டின் லாகூர் நகரில் வசிப்பர் நசியா. இவர் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். மேலும் சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய நசியா, தனது காதலுடன் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டார். 
 
அவர் இருக்கும் இடத்தை தெரிந்து கொண்ட நசியாவின் குடும்பத்தினர், அவரிடம் சமாதானம் பேசி வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளனர். எனவே, தனது காதல் கணவருடன் வீட்டிற்கு வந்துள்ளார் நசியா. 
 
இந்நிலையில், வீட்டிலிருந்து நசியாவிற்கும், அவரது சகோதரை முகம்மது இஷாக்கிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த முகம்மது “வீட்டை விட்டு ஓடிப்போய் நமது குடும்பத்திற்கு களங்கத்தை ஏற்படுத்திவிட்டாய்” என கத்திய படி கத்தியால் அவரை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால், நசியா ரத்த வெள்ளத்தில் அங்கேயே மரணம் அடைந்தார். 
 
இதையடுத்து முகம்மதுவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :